🏅 இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் - 2026 🏅
அன்பான அழைப்பு
எமது பாடசாலையில் ஏப்பிரல் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளுக்கு பெற்றோர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க (SDC) உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
மாணவர்களின் திறமைகள், ஒற்றுமை உணர்வு மற்றும் விளையாட்டு மனப்பான்மையை வெளிப்படுத்தும் இந்த சிறப்பான நிகழ்வில் தங்களின் வருகை எமக்கு மிகுந்த உற்சாகத்தையும் பெருமையையும் அளிக்கும்.
மேலும், இந்நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்துவதற்கு தங்களின் பூரண ஒத்துழைப்பையும் ஆதரவையும் அன்புடன் எதிர்பார்க்கிறோம்.
தங்களின் வருகையால் எமது மாணவர்களை ஊக்கப்படுத்தி, இந்த விழாவை மேலும் சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.
இப்படிக்கு,
விளையாட்டு ஏற்பாட்டுக் குழு
MR / Dharul Uloom Maha Vidyalaya

