🏫 எமது பாடசாலையின் வரலாறு
அறிவின் இல்லம் எனப் போற்றப்படும் மாத்தறை முஸ்லிம் வித்தியாலயம், பின்னர் தாருல் உலூம் மகா வித்தியாலயம் என உயர்த்தப்பட்ட இக்கல்வி நிலையம், 1891 ஆம் ஆண்டு தென் மாகாணத்தில் முஸ்லிம் சமூகத்திற்காக நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் 60 மாணவர்களும் 3 ஆசான்களும் இணைந்து சிறிய திண்ணைப் பாடசாலையாகத் தொடங்கியது.
முதல் நிர்வாகியாக ஐ.எல்.எம். நைனா மரிக்கார் அவர்கள் நியமிக்கப்பட்டு, எம்.ஏ.எம். அப்துல் காதர் அவர்கள் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தலைமை ஆசிரியராகப் பணியாற்றி பாடசாலையின் அடித்தளத்தை வலுப்படுத்தினார். பின்னர் பல்வேறு அதிபர்கள் கல்வி வளர்ச்சிக்காக தங்களை அர்ப்பணித்தனர். குறிப்பாக D.S. அப்துல் லதீப் அவர்கள் 1928 இல் பொறுப்பேற்று, எட்டாம் வகுப்பு வரை கல்வி கற்கும் வசதியை ஏற்படுத்தினார்.இரண்டாம் உலகப் போரின்போது பாடசாலை கட்டடம் அரசின் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்பட்ட போதும், சமூகத்தின் அர்ப்பணிப்பால் கல்வி தொடரப்பட்டது. 1960களில் சமூகத்தின் பங்களிப்பால் “பாத்திமா மாவத்தை”யில் நிரந்தர கட்டடம் அமைக்கப்பட்டது. அரை நூற்றாண்டு காலத்திற்குப் பின், பாடசாலை தாருல் உலூம் மகா வித்தியாலயம் எனப் பெயர்மாற்றம் பெற்று, “அறிவின் இல்லம்” என்ற அடையாளத்துடன் புதிய உயரத்தை எட்டியது.1970–1980களில் விஞ்ஞான கூடம், மரவேலைக் கூடம், நூலகம் போன்ற வசதிகள் சேர்க்கப்பட்டன. மாணவர்கள் கலை, வர்த்தகம், விஞ்ஞானம் போன்ற துறைகளில் பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றனர். சமூக நலன்விரும்பிகள், பெற்றோர், பழைய மாணவர்கள் ஆகியோரின் பங்களிப்பால் பாடசாலை பௌதீக வளங்களிலும் கல்வி தரத்திலும் முன்னேற்றம் கண்டது.
2000களில் புதிய கட்டடங்கள், விளையாட்டு திடல்கள், சுற்றுச்சூழல் அழகுபடுத்தல் ஆகியவை மேற்கொள்ளப்பட்டன. மாலை நேர வகுப்புகள், சிறப்பு பயிற்சிகள் மூலம் க.பொ.த (சா/த) மற்றும் க.பொ.த (உ/த) பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகள் கிடைத்தன. 2014 ஆம் ஆண்டு க.பொ.த (சா/த) பரீட்சையில் 100% பெறுபேறு பெற்றது பாடசாலையின் பெருமைக்குரிய சாதனையாகும்.
தற்போதைய நிலை
இன்று, தாருல் உலூம் மகா வித்தியாலயம், இஸ்லாமிய மதிப்புகளையும் நவீன கல்வியையும் இணைத்து, மாணவர்களை அறிவார்ந்த, ஒற்றுமையுள்ள, பொறுப்பான குடிமக்களாக உருவாக்கி வருகிறது.
தற்போது பாடசாலையின் அதிபராக M.T.M. மிப்தா (M.T.M. Miftha) அவர்கள் பணியாற்றி வருகிறார். அவரின் தலைமையில் பாடசாலை கல்வி தரத்திலும், பௌதீக வளங்களிலும், சமூக பங்களிப்பிலும் புதிய முன்னேற்றங்களை அடைந்து வருகிறது.
சமீபத்திய வெற்றி
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் அடிப்படையில் கடந்த 2020 – 2024 ஐந்து வருட காலத்தில் தேசிய மட்டத்தினைத் தாண்டிய சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றமைக்காக, 2025.10.22 அன்று எமது மாத்தறை / தாருல் உலூம் மகா வித்தியாலயம் “சுதக்ஷினாபிஷேக” விருது பெற்றுக் கொண்டது. இது பாடசாலையின் கல்வி மேம்பாட்டிற்கும் சமூக அர்ப்பணிப்பிற்கும் பெருமை சேர்த்த முக்கியமான சாதனையாகும்.
Brief History of Dharul Uloom Maha Vidyalaya
Dharul Uloom Maha Vidyalaya, originally known as Matara Muslim School, was founded in 1891 to serve the Muslim community in the Southern Province of Sri Lanka. It began as a small verandah school with 60 students and 3 teachers. The first administrator was I.L.M. Naina Marikkar, and M.A.M. Abdul Kader served as principal for over three decades, laying a strong foundation.
In 1928, under D.S. Abdul Latheef, the school expanded to offer education up to Grade 8. Despite challenges during World War II, the community ensured uninterrupted learning. In the 1960s, a permanent building was established on Fatima Mawatha, and the school was renamed Dharul Uloom Maha Vidyalaya, earning the title “House of Knowledge.”
From the 1970s onward, facilities such as science labs, a library, and workshops were added, enabling students to pursue higher education in arts, commerce, and science. The 2000s saw new buildings, sports grounds, and environmental improvements. Academic excellence continued, with 100% pass rates in the 2014 GCE O/L exams.
Today, under the leadership of M.T.M. Miftha, the school blends Islamic values with modern education, shaping responsible citizens. In 2025, Dharul Uloom Maha Vidyalaya received the prestigious Sudarshanaabhisheka Award for achieving results surpassing national standards over five years.

