🌙 Special Programme to Mark the Islamic New Year (Muharram) 🌙

In accordance with the Ministry of Education, Higher Education and Vocational Education Circular No. ED/09/55/02/02, our school successfully organized a special religious awareness programme to commemorate the Hijri 1448 Islamic New Year (Muharram).


The keynote address was delivered by Ash-Sheikh Ajmal (Naleemi), Vice Principal of Galle Muslim Ladies' College, who shared valuable insights with the students.


During his lecture, he explained the significance of the month of Muharram, the historical background of the Hijrah, and the spiritual values associated with the Islamic New Year. He also highlighted moral values, social responsibility, unity, and cultural aspects related to Muharram, creating greater awareness among the students.


The programme enriched the students’ religious knowledge while encouraging discipline, responsibility, and a commitment to academic excellence. The event was attended by the Principal, Vice Principals, teachers, and students, making it a meaningful and memorable occasion.


🌙 We extend our heartfelt wishes to everyone on the occasion of the Hijri 1448 Islamic New Year. May it bring peace, blessings, and prosperity to all.


🌙 මුහර්රම් ඉස්ලාමීය අලුත් අවුරුද්ද නිමිත්තෙන් විශේෂ වැඩසටහන 🌙


අධ්‍යාපන, උසස් අධ්‍යාපන හා වෘත්තීය අධ්‍යාපන අමාත්‍යාංශයේ ED/09/55/02/02 චක්‍රලේඛයට අනුව, හිජ්රි 1448 ඉස්ලාමීය අලුත් අවුරුද්ද (මුහර්රම්) නිමිත්තෙන් අප පාසලේ විශේෂ ආගමික හා දැනුවත් කිරීමේ වැඩසටහනක් සාර්ථකව පැවැත්විණි.


මෙම අවස්ථාවේ ප්‍රධාන දේශනය ගාල්ල මුස්ලිම් බාලිකා විද්‍යාලයේ නියෝජ්‍ය විදුහල්පති අෂ්-ෂෙයික් අජ්මල් (නලීමි) මහතා විසින් සිසුන් අමතමින් පවත්වන ලදී.

එහිදී මුහර්රම් මාසයේ වැදගත්කම, හිජ්රා ඉතිහාසය, ඉස්ලාමීය අලුත් අවුරුද්දේ ආධ්‍යාත්මික වටිනාකම් මෙන්ම යහපත් සදාචාරය, සමාජ වගකීම්, එකමුතුකම සහ සංස්කෘතික අංග පිළිබඳව ද සිසුන් දැනුවත් කරන ලදී.

මෙම වැඩසටහන සිසුන්ගේ ආගමික දැනුම වර්ධනය කිරීමටත්, වගකීම් සහගත හා යහපත් පුරවැසියන් ලෙස ඔවුන් ගොඩනැගීමටත් මහත් පිටුබලයක් විය.

මෙම අවස්ථාව සඳහා විදුහල්පතිතුමා, නියෝජ්‍ය විදුහල්පතිවරුන්, ගුරු මණ්ඩලය සහ සිසු සිසුවියන් සහභාගී වී වැඩසටහන සාර්ථක කරනු ලැබීය.

🌙 හිජ්රි 1448 ඉස්ලාමීය අලුත් අවුරුද්ද නිමිත්තෙන් සියලු දෙනාටම අපගේ හෘදයාංගම සුබ පැතුම් එක් කරමු.


🌙 முஹர்ரம் இஸ்லாமிய புத்தாண்டை முன்னிட்டு விசேட நிகழ்வு 🌙


கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ED/09/55/02/02 சுற்றறிக்கைக்கு அமைவாக, ஹிஜ்ரி 1448 முஹர்ரம் இஸ்லாமிய புத்தாண்டை முன்னிட்டு எமது பாடசாலையில் விசேட சமய மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதான பேச்சாளராக காலி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் உப அதிபரும், அஷ்ஷெய்க் அஜ்மல் (நளீமி) அவர்களும் கலந்து கொண்டு, மாணவர்களை இலக்காகக் கொண்டு பயனுள்ள விசேட சொற்பொழிவொன்றை நிகழ்த்தினார்.

அவரது உரையில் முஹர்ரம் மாதத்தின் சிறப்பும், அதன் வரலாற்றுப் பின்னணியும், ஹிஜ்ரத் நிகழ்வின் முக்கியத்துவமும், இஸ்லாமிய புத்தாண்டின் ஆன்மீக மற்றும் ஒழுக்கப் பெறுமதிகளும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டன. மேலும், நல்லொழுக்கம், சமூகப் பொறுப்புணர்வு, ஒற்றுமை மற்றும் கலாசார அம்சங்கள் தொடர்பிலும் மாணவர்களுக்கு விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

இச்சிறப்பு அமர்வு மாணவர்களின் சமய அறிவை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவர்களிடையே பொறுப்புணர்வு, ஒழுக்க விழுமியங்கள் மற்றும் கல்வி முன்னேற்றத்திற்கான ஊக்கத்தையும் வளர்த்தது.

இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர், உப அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். அனைவரினதும் பங்களிப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வு, முஹர்ரம் இஸ்லாமிய புத்தாண்டின் உண்மையான அர்த்தத்தையும் அதன் பெறுமதிகளையும் மாணவர்களிடையே எடுத்துச் சென்ற அர்த்தமிக்க நிகழ்வாக அமைந்தது.

🌙 ஹிஜ்ரி 1448 இஸ்லாமிய புத்தாண்டை முன்னிட்டு அனைவருக்கும் எமது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அல்லாஹ்வின் அருளும் ஆசீர்வாதமும் அனைவரின் மீதும் பொழிய பிரார்த்திக்கிறோம். ✨